தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் யுவராஜா, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து விமர்சித்துள்ளார். சினிமா புகழை வைத்து அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் வடிவேலு, குஷ்பு போன்ற நட்சத்திரங்களுக்கு கூடிய கூட்டம் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை என்றும், ஈரோட்டின் சாயக்கழிவுப் பிரச்சனை போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து விஜய் பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.