காலி தட்டுடன் ஒலி எழுப்பும் போராட்டம்

ஈரோட்டில், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் காலித்தட்டில் ஒலி எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, ஓய்வூதிய உயர்வு, காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்குதல், அமைப்பாளர்களுக்கு பதிவுறு எழுத்தராக பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தம் 03.02.2026 முதல் காலவரையின்றி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி