சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு விவகாரத்தில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, ஈரோட்டில் வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு காளைமாடு சிலை அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கொண்டு வந்துள்ளது. இதனை கைவிட திமுகவின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.