ஈரோட்டில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கொ. தனுஷ்கோடி தலைமை தாங்கினார். காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.