விசைத்தறி உரிமையாளர்கள்பாஜக நெசவாளர்அணி தலைவருடன் சந்திப்பு

ஈரோட்டிற்கு வருகை தந்த பாஜக நெசவாளர் அணியின் மாநிலத் தலைவர் அண்ணாதுரை, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளரின் குடோனுக்குச் சென்று உற்பத்தி முறைகளைப் பார்வையிட்டார். விசைத்தறித் தொழில் சந்திக்கும் சவால்கள், நூல் விலை ஏற்றம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அண்ணாதுரை உறுதியளித்தார். இந்த உறுதிமொழி விசைத்தறித் தொழிலுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி