ஈரோடு: டெல்லியில் தமிழக காவலர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்

டெல்லியில் தமிழக சிறப்புப் போலீஸ் பிரிவின் தலைமை காவலர் குமார், அங்கு தமிழகக் காவலர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாகப் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். 2018 முதல் திகார் சிறையில் பணியாற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்களுக்குப் போதிய ஓய்வின்றி பணிச்சுமை இருப்பதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் சொந்த ஊர் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  டெல்லி காவல்துறை கமெண்டன்ட் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி