திமுகவை சேர்ந்த பேரூராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான துளசிமணி சக்திவேல் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். பேரூராட்சி நிர்வாகத்தில் நிலவும் நெருக்கடிகள் குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி