திமுக ஒன்றிய செயலாளர் மிரட்டல் விடுப்பதாக புகார்

பவானி அருகே வைரமங்கலம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக நின்றிருந்த கோயில் திருவிழாவை மீண்டும் நடத்தக் கோரி நாடார் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக் கோயிலின் சிலையை எடுத்துச் சென்று, மற்றொரு சமூகத்தினர் புதிய கோயிலில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் கே.பி. துரைராஜ் சாதி பாகுபாட்டைத் தூண்டிவிட்டு, மிரட்டல் விடுப்பதாக கலெக்டரிடம் புகார் அளித்தனர். சாதி மோதலைத் தவிர்க்கவும், திருவிழா நடத்த அனுமதி கோரியும் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் ஆபீசில் இன்று மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி