ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று (ஏப்ரல் 3) காலையிலிருந்து ஈரோடு மாநகர் பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர் சற்று லேசாக வெயில் அடித்தது.
இந்நிலையில் காலை 11 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அது கனமழையாக மாறியது. சுமார் 25 நிமிடம் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. ஈரோடு வீரப்பன் சத்திரம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் சோலார் மொடக்குறிச்சி பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.