அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் டாக்டர் டிஜி ராமமூர்த்தி கலந்து கொண்டார். தொடர்ந்து, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு காரணமாக இருந்த 4 குடும்பங்களுக்கு உறுப்பு தானம் அமைப்பில் இருந்து வழங்கப்பட்ட கேடயங்களை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், சிறுநீரக நோய் குறித்தும், சிறுநீரக தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில், சசிகலா, ரவி, மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் 6 ஆண்டுகளாக முதலிடம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறுகையில், தமிழகம் முழுவதும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் பேர் மாற்று சிறுநீரகம் தானமாக பெற, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர்.