ஈரோடு அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம் முள்ளாம்பரப்பில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதாலும், இது முக்கிய சாலையாக இருப்பதாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடை அமைக்கும் இடத்தின் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மக்களின் எதிர்ப்பையும் மீறி கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி