உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பிப்ரவரி 25 முதல் 28 வரை நடைபெறும் தேசிய அமர்வு கைப்பந்து போட்டியில் பங்கேற்க தமிழக அணி இன்று உற்சாகமாகப் புறப்பட்டது. ஈரோட்டில் 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா ₹22,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக, வீரர்கள் விமானத்தில் போட்டிக்கு அனுப்பப்படுகின்றனர். இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.