ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி தலைமையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசியக் கொடியின் மூவர்ண பலூன்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சச பலூன் வானில் பறக்கவிடப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயின் மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.