இதில், 3 கி. மீ, 6 கி. மீ என நடைபெற்ற போட்டியில், 1,400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு செங்குந்தர் பள்ளி மைதானத்தில் தொடங்கி போட்டியை, மாவட்ட எஸ். பி ஜவஹர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, மீண்டும் செங்குந்தர் பள்ளி மைதானத்திலேயே நிறைவடைந்தது.
போட்டியில், 6 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. மேலும், மராத்தானில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மராத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகிகள் சிவானந்தன், மாசிலாமணி, ரவிச்சந்திரன், புஷ்பராஜ், ரவி, கிருஷ்ணகுமார், முருகேசன் ஆகியோர் மேற்கொண்டனர்.