ஈரோடு கருங்கல்பாளையம் ஓங்காளியம்மன் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ராஜேஸ்வரி, பெற்றோரின்றி பெரியப்பா வீட்டில் வசித்து வந்தார். கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், அவரது பெரியப்பா சேகர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தேடி வருகின்றனர்.