ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'சொல்லின் செல்வர்' ஈ. வி. கே. சம்பத் ஐயா அவர்களின் 49-வது நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சம்பத் நகரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் டி. திருச்செல்வம், மண்டலத் தலைவர் சூரம்பட்டி சாம்ராட் அசோக், ஈரோடு வட்டாரத் தலைவர் எம். ஆர். நட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.