ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று ரயில் மோதி நந்தாபு கொடகு (40) என்ற தொழிலாளி மயங்கி கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நந்தாபு தண்டவாளத்தை கடக்கும்போது கவனக்குறைவாக இருந்ததால் ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.