ஈரோடு: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் கைது

ஈரோடு கருங்கல்பாளையம் மரப்பாலம் கே எஸ் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்வகுமார் குற்றவாளி என தெரியவந்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி