இவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் பின்னர் வழக்கு விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்படுவார்கள். தொடர்ந்து போலீசார் குற்றவழக்கில் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத விசாரணையில் மீதமுள்ள நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளை கண்காணிப்பதற்கு தனியாக காவல்துறையினர் பணியில் உள்ளனர். அவர்கள் வீடுகள் மற்றும் நீதிமன்றம் வருவதையும் கண்காணித்து வருகின்றனர்.
பேட்ரோல் வாகனம் இருந்தது. இப்படி சம்பவம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. எப்படி நடந்தது என்று விசாரணைக்குப் பிறகுதான் தெரியும். தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை சரக டிஐஜி சசி மோகன் கூறினார்.