நலத்திட்ட முகாம்களில் 42, 000 மனுக்களுக்கு உடனடி தீர்வு –

ஈரோட்டில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டார். ஈரோடு மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட 340 முகாம்களில் பெறப்பட்ட 68,674 மனுக்களில் 42,652 மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், பட்டியலிடப்படாத இதர சேவைகள் தொடர்பான 69,187 மனுக்களில் 47,432 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பின் போது கண்டறியப்பட்ட பழமையான கல் மதகுகள் மற்றும் கட்டுமானங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், அவை பிரிக்கப்பட்டு காலிங்கராயன் மணிமண்டபம் அல்லது அணைப்பகுதியில் சீரமைத்து வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி