ஈரோடு: சட்டவிரோத மது விற்பனை - ஒருவர் கைது

ஈரோடு நகர காவல் நிலையப் போலீசார், நேதாஜி சாலை, ஹிந்து பேக்கரி அருகில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் சட்டவிரோதமாகவும், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி