ஈரோட்டில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜிஎஸ்டி ஐடிசி-4 (ITC-04) நடைமுறையால் விசைத்தறித் தொழில் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. நூல் வாங்குவது முதல் துணியாக மாறும் வரை உள்ள அனைத்துப் படிநிலைகளையும் தனித்தனியாகப் பதிவேற்றும் ஜிஎஸ்டி விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.