ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, ஈரோடு நகரில் இன்று சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 11 நாட்களாகப் போராடி வரும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், உடனடியாக உயர்மட்டக் குழு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மாநில செயலாளர் திருமதி. உஷாராணி தெரிவித்தார். ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் திரு. வெங்கடு வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி