மோசடி வழக்கு: இருவர் டிசம்பர் 16க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

ஈரோட்டில் ஜவுளி வியாபாரத்தில் ரூ.1 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நரேஷ்குமார் மற்றும் ரத்தன்குமார் பிரபுராஜ் படேல் ஆகிய இருவரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் (எண்-2) முன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ். ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட தேதிக்குள் ஆஜராக தவறினால், இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு இந்த மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி