ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் போதை ஊசி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த பைசல் ரகுமான் (29), அப்பாஸ் (29) மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சந்தியா (25), சமீம் பானு (22) ஆகிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 160 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.