சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில் உள்ள ப்ரீஜர், ஏசி மெஷின் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
"தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது.." ஆளூர் ஷா நவாஸ்