ஈரோடு வளையக்கார் வீதி பகுதியைச் சேர்ந்த 45 வயது லிங்க மூர்த்தி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.