ஈரோடு: தலை நசுங்கி பெண் உயிரிழப்பு

ஈரோடு அடுத்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு 21 வயது உள்ள மிர்த்தியங்கா என்ற மகள் உள்ளார். இவர் மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் (ஆர்.டி.) மழலையர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கமாகப் பள்ளிக்கு வருவது வழக்கம். 

அதே போல இன்று (ஜூலை 31)  காலையிலும் மிர்த்தியங்கா பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். மூலப்பாளையம் பகுதியில் வந்தபோது பின்புறமாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதி விபத்து நேர்ந்தது. இதில் மிர்த்தியங்கா பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி