மக்களிடம் இதனால் உற்சாகம் இல்லை. தேர்தல் அடிக்கடி வருவதால் மக்களுக்கும் சிரமம். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்க வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால் தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது. இது குறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் என்றாலும் மேற்கு தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. முதலமைச்சர் பெரிய கட்சிகள் நேரடியாக போட்டியிடாமல் வேறு கட்சி முன்னிறுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பெயர் குறிப்பிடாமல் கூறுகிறார் அதனால் அதற்கு விடை அளிக்க முடியாது என்றார்.
பவானிசாகர்
சாலையில் யானை நடமாட்டம் வாகன ஓட்டுனர்கள் அச்சம்