ஈரோடு: தொண்டையில் சிக்கிய ஊக்கு: லாவகமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

ஈரோடு தறி தொழிலாளியான கன்னியப்பன் என்பவரின் தொண்டையில் திறந்த நிலையில் சிக்கிய ஊக்கை (Safety pin) லாவகமாக அகற்றி உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.சாப்பிட்டு விட்டு பற்களை ஊக்கால் குத்தியபோது கன்னியப்பனுக்கு வலிப்பு ஏற்படவே, ஊக்கு தொண்டைக்குள் சிக்கி ரத்தம் வெளியேற தொடங்கியுள்ளது. எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். கன்னியப்பன் தற்போது மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி