ஈரோடு: இளம்பெண் மீது தாக்குதல்.. 4 பேர் கைது

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (26) என்பவர், தனது நண்பர்களான பைசல் ரகுமான் (29), அப்பாஸ் (29), சந்தியா (25), சமீம் பானு (22) ஆகியோருடன் ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பிரீத்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பிரீத்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் நால்வர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி