ஈரோடு: 8 தொகுதிகளில் 131 மனுக்கள் ஏற்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், 202 வேட்பாளர்கள் தாக்கல் செய்த 273 மனுக்களில், 131 மனுக்கள் ஏற்கப்பட்டு, 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனையின்போது அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்திருந்தால், ஒரு மனு ஏற்கப்பட்டு மற்றவை நிராகரிக்கப்பட்டன. தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி