பவானி, பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் குழந்தை இருப்பதாக 'சைல்ட் லைன்' உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஒரு வீட்டில் சோதனை நடத்தி, பிரவீன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். மும்பையிலிருந்து இரண்டு பெண்கள் மூலம் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை விற்பனைக்காக இங்கு கொண்டுவரப்பட்டது உறுதியானது. மீட்கப்பட்ட குழந்தை ஈரோட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பவானி பகுதியில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.