ஈரோடு: அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆயுத பூஜை தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பண்டிகை வர உள்ளதால் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 2 -வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

கருங்கல்பாளையம் முதல் காளை மாட்டு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று(அக்.5) ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவரை ஆக்கிரமிப்புகள் மற்றும் பணி தொடங்கியது. இதற்காக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர்.

சும்மா நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாளை ஈரோடு மேட்டூர் ரோடு ஸ்வஸ்திக் கார்னர் வரை அபிராமிப்புகள் மற்றும் பணி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி