ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அங்கீகாரம், அவுட்சோர்சிங் ரத்து, தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டம் தங்கள் நீண்டகால கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி