ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டில் திங்கள்கிழமை அன்று நடைபெறும் ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாக கொள்முதல் செய்து வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஜவுளி சந்தை பகுதியில் சோதனை நடத்திய போது கேரளா மாநிலத்தில் இருந்து வந்த முஸ்தபா என்ற ஜவுளி வியாபாரியிடம் ஜவுளி ரகங்களை மொத்தமாக வாங்க வந்தவரிடம் 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலமாக பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.