பிரதமருக்கு நன்றியை தெரிவித்த ஈஸ்வரன்

ஐரோப்பிய யூனியன் உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் வரி குறைப்பு அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஓராண்டாக அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் தேக்கநிலை நிலவிய நிலையில், இந்த திடீர் அறிவிப்பு இந்திய வியாபாரிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழக ஜவுளித் தொழில் போன்ற முடங்கிய துறைகள் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், புதிய ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும், தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என்றும், இதனால் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்த சிக்கல்கள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. அமெரிக்க வரி குறைப்பை சாத்தியமாக்கிய இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி