வேட்புமனு தாக்கலுக்குப்பின் வி. சி. சந்திரகுமார் கூறியதாவது பெரியாரின் வழித்தோன்றல்களான திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால், மீண்டும் 2026-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
அந்த மக்கள் நலத்திட்டங்களை முன் நிறுத்தி நாங்கள் போட்டியிடுகிறோம். எனவே, வரலாற்றுச்சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியை இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் 200 சதவீத வெற்றி கிடைக்கும் என பெண்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். இதுவரை 9 வார்டுகளில் மக்களைச் சந்தித்துள்ளோம் என்று கூறினார்.