தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தமிமுன் அன்சாரி தெரிவித்தார். கொங்கு மண்டலத்தின் 50 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வலுவான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.