ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, 60 வார்டுகளில் உள்ள தெருக்களில், 50க்கும் மேற்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால், அபேட் மருந்து ஊற்றுகின்றனர். டயர், தேங்காய், மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால், அதனை அப்புறப்படுத்த குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். 

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு பகுதிகளில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலோ அல்லது குடிநீர் தொட்டி திறந்திருந்தாலோ, அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால், அதனை கண்டறிந்து அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி