ஈரோட்டில் கல்லூரி பேருந்து மீது கிரேன் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி பேருந்து, ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது, சந்திலிருந்து வெளியே வந்த கிரேன் எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது மோதியது. பேருந்தின் மேல் பகுதியில் கிரேன் மோதியதால் உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினர். மோதிய வேகத்தில் கிரேன் கவிழ்ந்ததில் போக்குவரத்து சிக்னல் மற்றும் மின் பெட்டி சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு நகர போலீசார், கவிழ்ந்த கிரேனை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி