மாநகராட்சி ஓட்டுநர் சங்க மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது

தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாநில கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில், அரசாணை எண் 10-ஐ தளர்வு செய்து, நகராட்சிகளில் ஓட்டுநர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும், அரசாணை எண் 152-ன் காரணமாக குறைக்கப்பட்ட ஓட்டுநர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படுவதாகவும், சாலைகளில் குழாய் உடைப்பு போன்ற அவசர காலங்களில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் அவசியம் என்றும் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி