ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மாநகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகர விவசாய அணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி 36வது வார்டு கவுன்சிலருமான பழனியப்பா செந்தில் என்ற செந்தில்குமார், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தனது விருப்ப மனுவையும், விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.