சட்டமன்றத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி தலைமையில் இன்று (18.02.2026) நடைபெற்றது. தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் மற்றும் உதவி பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துதல், தேர்தல் பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி