ஈரோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் சிற்றுராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி