ஈரோடு: வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

ஈரோடு அன்னை சத்யா நகரில் வசிக்கும் மாணிக்கம்-முத்துலட்சுமி தம்பதியினரின் 5 வயது மகன் சாய்சரண், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைப்பழத்தை சாப்பிட்டான். மூச்சு குழாய்க்குள் பழம் சென்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இந்த துயர சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி