ஈரோடு சிக்கன்யா நாயக்கர் அரசு கலைக் கல்லூரியில் 52 ஏக்கர் பரப்பளவில் 16 ஏக்கரில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள நிலங்களில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.