சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா கடந்த 19ஆம் தேதி காரில் வைத்தே கொலை கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜான் கொலை சம்பவமானது அவரது மனைவி சரண்யாவின் கண்ணெதிரே காரில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிய நான்கு பேரும், கடந்த 19ஆம் தேதி அன்றே காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிபட்டனர்.
சம்பவம் நடந்த அடுத்த நாள் இருபதாம் தேதி அதிகாலையில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜான் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த சலீம் மற்றும் ஜீவகன் ஆகிய இருவர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி சரணடைந்தனர்.