ஈரோடு இந்திரா நகரில் ஆடிட்டர் ராஜன் - நிர்மலா தேவி தம்பதியினரின் வீட்டில் சுமார் 80 சவரன் தங்க நகைகள் திருடு போனதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது, வீட்டிற்கு வந்த இளைய மகன் ஜெய்கிருஷ்ணா பீரோ திறக்கப்பட்டு நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பணியாளர்கள் சாவியைப் பயன்படுத்துவதை அறிந்த யாரோ ஒருவர் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கருங்கல்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.