ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு 59,412 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். விஷம் அருந்தியவர்கள், வயிற்று வலி, ஒவ்வாமை, நாய் கடி, கால்நடைகள் தாக்குதல், விபத்து, இதய மற்றும் ரத்த நாள பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல், குழந்தை பிறப்பு, மகப்பேறு, சுவாசம் தொடர்பான பிரச்சனைகள், மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 ஆம்புலன்சை பயன்படுத்தியுள்ளனர். இதில் விபத்தில் சிக்கியவர்கள் 14,169 பேர், கர்ப்பிணி தாய்மார்கள் 386 பேர், இதய நோயாளிகள் 3,634 பேர், சுவாச பிரச்சனை உடையவர்கள் 1,145 பேர், வாத பிரச்சனை உடையவர்கள் 829 பேர், பச்சிளம் குழந்தைகள் 444 பேர் என மொத்தம் 59,412 பேர் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் உதயநிதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் அம்பிகாசன் தெரிவித்துள்ளனர்.